முகத்தில் ரத்தம் வழிய... கையில் விலங்குடன் ‘கர்ணன்’ தனுஷ்... ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தியேட்டர் ரிலீஸ் தேதியோடு கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14ம் தேதி காலை 11.06 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்.
“பரியோறும் பெருமாள்” படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் உடன் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கின் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகியுள்ளதால் படு பிசியாக இருக்கும் தனுஷ், கையோடு கர்ணன் டப்பிங் பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு புகைப்படத்துடன் ட்விட்டரில் அறிவித்திருந்தார். படத்தின் டீசர், டிரெய்லர் போன்ற அப்டேட்களை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அசத்தலான அறிவிப்பு வெளியானது.
தியேட்டர் ரிலீஸ் தேதியோடு கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14ம் தேதி காலை 11.06 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார். இதையடுத்து ட்விட்டரில் நேற்று முதலே #KarnanFirstLook ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வந்தது. தற்போது சொன்ன நேரத்திற்கு படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். முகத்தில் ரத்தம் வழிய, கையில் விலங்குடனும் கண்ணில் கனல் தெறிக்கும் கோபத்துடனும் நிற்கும் தனுஷின் கர்ணன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அத்துடன் படத்தை ஏப்ரல் 9ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.