‘இவ்வளவு நல்ல படத்தை 40 நாட்கள் ஆனபிறகு பார்த்ததற்காகவும் முதல் பட கதையைக் கேட்காமல் கூட அலைய விட்டதற்காகவும் ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

‘இவ்வளவு நல்ல படத்தை 40 நாட்கள் ஆனபிறகு பார்த்ததற்காகவும் முதல் பட கதையைக் கேட்காமல் கூட அலைய விட்டதற்காகவும் ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தாணு தயாரிப்பில் தான் நடிக்கவிருப்பதாக பெருமையுடன் நேற்று ட்விட் பண்ணியிருந்தார் நடிகர் தனுஷ். இந்த திடீர் காம்பினேஷனுக்குப் பின்னால் ஒரு கசப்பான ஃப்ளாஷ்பேக் இருப்பது தனுஷ், மாரி செல்வராஜ் தவிர யாருக்கும் தெரியாது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸில் கமிட் ஆவதற்கு முன்பு பல நடிகர்களுக்கு கதை சொல்ல அலைந்த இயக்குநர் அதிகம் அலைந்தது நடிகர் தனுஷுக்குப் பின்னால்தான். பல மாத அலைச்சல்களுக்குப் பின்னும் கடைசிவரை கதையைக் கூட கேட்கவில்லை தனுஷ். இதை மாரி செல்வராஜ் சுட்டிக்காட்டாத போதும் சரியாய் நினைவில் வைத்திருந்தார் தனுஷ்.

இந்நிலையில் அடுத்து இணைந்து பணியாற்றவிருக்கும் படத்துக்கான சந்திப்பின்போது அதை வெளிப்படையாக குறிப்பிட்ட தனுஷ் மிகவும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டதோடு, ‘இந்தப் படத்துல உங்க கிட்ட கதை கேக்காமலேயே நடிக்கிறேன் நண்பா’ என்று செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டாராம்.