dhanush issue new mother meenatchi cry

தனுஷ் எங்களுடைய மகன் என்று கடந்த சில வருடங்களுக்கு முன் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த வழக்கில் இறுதியாக கடந்த மாதம் 28ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய பெற்றோருடன் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை மதுரை அரசு மருத்துவமனை டீன் வைரமுத்துராஜா தலைமையிலான குழுவினர் சரி பார்த்தனர்.

இந்நிலையில் டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், சிறிய அளவிலான மச்சம் மற்றும் சில அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் எந்த தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் கூறியதாவது, தனுஷ் எங்கள் மகன் என்று நிரூபிப்பதற்காகத் தான் போராடி வருகிறோம். 

எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிக்கையில் கூட தெரிவித்துள்ளார்கள். இதில் இருந்தே உண்மை வெளி உலகிற்கு தெரியவந்துவிட்டது என்றார்.

மேலும் தனுஷின் புது தாய் மீனாட்சி நாங்கள் பணம் காசுக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான். 16 வயதில் வீட்டை விட்டு வெளியே சென்ற எங்கள் மகன் கலைச்செல்வன், அவர் அம்மா என்று அழைத்தால் போதும் என கதறி அழுதார்.