ஒவ்வொரு நாளும், நடிகர் தனுஷ் ரசிகர்களை குஷியாக்கு வகையில் ஏதேனும் ஒரு தகவல் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.  அந்த வகையில், நேற்றைய தினம் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படம் அக்டோபர் 4 ஆம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள,  படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.  

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 'பேட்ட' படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதை உறுதி செய்தார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் என்கிற மலையாள நடிகர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் மூலம் ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக தமிழில் அறிமுகமாக உள்ளார். தமிழில் வில்லனாக அறிமுகமான பல மலையாள நடிகர்கள், முன்னை குணச்சித்திர நடிகர்களாக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.