dhanush gift the kaala movie jeep in mahendra company
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப்பை, பிரபல கார் நிறுவனத்துக்கு நடிகர் தனுஷ் பரிசளித்துள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் பல எதிர்ப்புகளை கடந்து வெளியாகியுள்ள ‘காலா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி பயன்படுத்திய ஜீப்பை , மஹிந்திரா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துவிட்டதாம். இதனால் இந்த காரை தங்களது நிறுவன அருங்காட்சியகத்தில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஆனந்த் விருப்பம் தெரிவிக்க அதனை தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது 'காலா' படத்தில் ரஜினி பயன்படுத்திய மஹிந்திரா ஜீப் அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மஹிந்திரா நிறுவன குழுவினர் சிலர் காலா கெட்டப்பில் அந்த ஜீப்பில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளதையும் ஆனந்த் பகிர்ந்துள்ளார்.
