தற்போது நடிகர் தனுஷ், ஒரு தந்தையாக தன்னுடைய இரண்டு மகன்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தங்களுடைய தந்தை பற்றிய நினைவுகளை புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ், ஒரு தந்தையாக தன்னுடைய இரண்டு மகன்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து, அசுரன், கர்ணன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பு மற்ற படங்களை விட வித்யாசமாக உள்ளது என ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களே தொடர்ந்து கிடைத்து வருகிறது. 190 நாடுகளில் மொத்தம் 17 மொழிகளில் வெளியான திரைப்படம் என்கிற பெருமையையும் 'ஜகமே தந்திரம்' பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மகன்களுடன், அமெரிக்காவில் அவுட்டிங் சென்ற பொது எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். படகில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் தனுஷின் மகன்கள் இருவரும் நன்கு வளர்ந்துள்ளதை பார்க்கமுடிகிறது. ஏற்கனவே மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் புகைப்படம் எடுப்பது போன்ற போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு தனுஷ்... 'இனிய தந்தையர் தினம் வாழ்த்துக்கள். ஒரு குழந்தையின் முதல் ஹீரோ தந்தைதான் என்பது எனக்கு நன்றாக தெரியும். லவ் யூ நண்பர்களே. நீங்கள் எனக்கு உலகத்தை அர்த்தப்படுத்துகிறீர்கள்' என்று பதிவு செய்துள்ளார். தனுஷ் தற்போது அமெரிக்காவில் 'தி க்ரேமேன்' என்ற ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
