தமிழ் சினிமாவில் நடிகர் என்பதையும் தாண்டி பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் தனுஷ். தற்போது ஹாலிவுட் வரை படங்கள் நடிக்க இருக்கிறார்.

இதனால் இவரது ரசிகர்கள் பல மடங்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் அண்மையில் அவரது ஆபிஸை தீடிர் என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.

காரணம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாக தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்போடு நடந்து கொள்ளாமல், அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறாராம்.

இதனால் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க தனுஷிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனராம். இதனால் தனுஷ் சிலரை மட்டும் வர சொல்ல, தனுஷை சந்திக்க மொத்த ரசிகர் கூட்டமே ஆபிஸில் ஆஜர் ஆகிவிட்டனராம்.

பின் அடுத்த ரசிகர் மன்ற தலைவர் பதவிக்கு, சில உறுப்பினர்கரின் பெயர்கள் பரிசீலிக்க பட்டதாக தெரிகிறது.