இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' . இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக, படம் உருவாவதிலும், வெளியாவதிலும், சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் எடுத்த முயற்சியால், தற்போது, இந்த படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டு, ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த வருடமே ரிலீஸ் ஆகும் என தனுஷின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த வருடம் இந்த படம் உறுதியாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம், இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன் படி, தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. எனவே ஏற்கனவே படக்குழு அறிவித்தது போல் இப்படம் அடுத்த மாதம் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில், தனுஷ் தன்னுடைய காதல் கதை பற்றி கூறுவது தான் இந்த படம் என்பது தெளிவாக தெரிகிறது. காதால், ரொமான்ஸ், ஆக்ஷன் என விறுவிறுப்பு குறையாமல் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த ட்ரைலரில் வெளியாகியுள்ள ஒவ்வொரு காட்சியும் கெளதம் மேனன் படம் என்பதை நிரூபிப்பது போல் உள்ளது. மேலும் காக்க காக்க படத்தின் ஷார்ட்ஸ் அடிக்கடி நினைவிற்கு வந்து அகல்கிறது.

இந்த படத்தின் நடிகை மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா, ராணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.