கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்த படம் "எனை நோக்கி தோட்டா". கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வந்திடும், அந்தா வந்திடும் என எதிர்பார்க்கப்பட்ட "எனை நோக்கி பாயும் தோட்டா", ஒருவழியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலீஸ் ஆனது. வழக்கம் போல 'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ' ஓப்பனிங்கை தனுஷ் ரசிகர்கள் சிறப்பாக செய்தனர். முதல் நாளில் தியேட்டர் வாசலில் குவிந்த ரசிகர்களைப் பார்த்து கெளதம் மேனன் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. 

கெளதம் மேனனின் படத்தை காண தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதை நம்பியே 3 ஆண்டுகள் ஆன பிறகும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தைரியமாக களம் இறக்கினார்கள். ஆனால் அனைவரது நம்பிக்கையிலும் மண்ணைப் போட்ட படம், அனைத்து திரையரங்குகளிலும் காலியாக ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்தது  "அசுரன்" திரைப்படம், அப்படம் தமிழகத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் வெறும் 13 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" திரைப்படம், தனுஷ் படங்களிலேயே மோசமான வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனை செய்துள்ளது.