தனுஷ் உடன் பிரபல நடிகைகளான ராஷி கண்ணா மற்றும் நித்யா மேனன் முதன் முறையாக தனுஷ் உடன் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ என தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த தனுஷ், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். ‘அவெஞ்சர்ஸ்’ பட இயக்குநர்களான ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது தமிழில் அடுத்தடுத்து காமிட்டாகியுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் மாறன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் நிருபராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் #D44 படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 

Scroll to load tweet…

மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். மேலும் டி.என்.ஏ. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் 6 ஆண்டுகளுக்குப் பிறகு #D44 படம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர். இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

Scroll to load tweet…

அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் பிரபல நடிகைகளான ராஷி கண்ணா மற்றும் நித்யா மேனன் முதன் முறையாக தனுஷ் உடன் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் கால் பதித்த பிரியா பவானி ஷங்கரும் முதன் முறையாக தனுஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது.

Scroll to load tweet…