Asianet News TamilAsianet News Tamil

Dhanush Atrangi Re movie : பாலிவுட்டையே மிரள வைத்த தனுஷ் படம்.... ஓடிடி-யில் புதிய சாதனை படைத்த ‘அட்ரங்கி ரே’

அட்ரங்கி ரே படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடித்துள்ளார்.

Dhanush Atrangi Re is Most Watched Film On Its Release Day in hotstar
Author
Tamil Nadu, First Published Dec 26, 2021, 3:17 PM IST

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். 

ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

Dhanush Atrangi Re is Most Watched Film On Its Release Day in hotstar

அந்தவகையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தனுஷ் நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நேரடியாக ஓடிடியில் வெளியான படம் ‘அட்ரங்கி ரே’. நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடிக்கும் 3-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்களில் நடித்திருந்தார். 

அட்ரங்கி ரே படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Dhanush Atrangi Re is Most Watched Film On Its Release Day in hotstar

கடந்த சில தினங்களுக்கு முன் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியான இப்படம், அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் ஓடிடி-யில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியான படங்களில் முதல்நாளில் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட படம் என்கிற சாதனையை அட்ரங்கி ரே படைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios