கோலிவுட்டின் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், கர படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
Dhanush D55 Movie : தனுஷ் தனது அடுத்த படமான ‘D55’ல் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அத்துடன், படக்குழுவினருடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இப்படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.
தனுஷின் அடுத்த படம்
ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் X தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இது ஒரு 'மாபெரும் புதிய தொடக்கம்' என்று குறிப்பிட்டு, இந்த படத்திற்காக ஆர் டேக் ஸ்டுடியோஸ் உடன் இணைவதாகவும் தெரிவித்துள்ளது. இதுவும் பான் இந்தியா படமாக தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<br>திரைப்படங்களைப் பொறுத்தவரை, தனுஷ் கடைசியாக ஆனந்த் எல். ராய் இயக்கிய 'தேரே இஷ்க் மே' என்ற இந்தி படத்தில் நடித்தார். ஒரு வேதனையான பிரிவுக்குப் பிறகு வாழ்க்கை மாறும் சங்கர் என்ற மனிதனின் கதையை இப்படம் சொல்கிறது. இப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ்-ல் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>அடுத்ததாக, 'போர் தொழில்' புகழ் விக்னேஷ் ராஜா இயக்கும் 'கர' என்ற ஆக்சன்-திரில்லர் படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். தனது கடந்த கால தவறுகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் அதே வேளையில், தனது குடும்பத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு மனிதனைப் பற்றியது இப்படம். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><div type="dfp" position=3>Ad3</div>


