தனுஷ் - வெற்றிமாறன் இணைந்தாலே அது வெற்றி கூட்டணி தான் என தனுஷின் ரசிகர்கள் முடிவெடுத்து விட்டனர். தனுஷுடன் வெற்றிமாறன் இணையும் ஒவ்வொரு படங்களிலும், தனுஷின் வேற லெவல் நடிப்பை ரசிகர்கள் பார்க்க முடியும்.

’பொல்லாதவன்’ படத்தில் துவங்கி, ’ஆடுகளம்’ , அசுரன் என தன்னுடைய நடிப்பை மெருகேற்றி கொண்டே செல்கிறார் தனுஷ். இதற்கான மிக பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது, தனுஷ் ஹோலிவுட் திரையுலகில் கூட தனக்கான ரசிகர்களை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வடசென்னை 2 படத்திற்காக இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்ல அணைத்து தரப்பினர் மத்தியிலும் உள்ளது.  இந்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியானதில் இருந்ததே பலர் தொடர்ந்து தங்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

 ‘வடசென்னை 2’படத்தின் பணிகள் துவங்கியதாகவும் தகவல்கள் கசிந்தன.  ஆனால் இந்த படம் குறித்த அடுத்த கட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை .

வெற்றிமாறனும், அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாகி கொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் விரைவில் 'வடசென்னை 2 ' உருவாகும் என தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அதே நேரத்தில் இப்படம் வெப் சீரிஸாக கூட, வெளியாகலாம் என்கிற வேறு லெவல் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகாததால், ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.