Dhanush and Pandiaraj are the ones who brought me up - Sivakarthikeyan elasticity ...

திரைப்பட வாய்ப்புகளை கொடுத்து என்னை வளர்த்துவிட்டவர்களே தனுஷூம், பாண்டிராஜூம்தான் என்று சிவகார்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து, தமிழ் பட உலகின் முன்னணி நாயகனாக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் கல்லூரி விழா ஒன்றில் பேசியது: “சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோ ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் நண்பனாக நடித்தால் போதும் என்று நினைத்தேன்.

ஹீரோக்களின் நண்பனாகும் வாய்ப்பை எதிர்பார்த்த எனக்கு தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் வாய்ப்பு வழங்கி வளர்த்து விட்டார்கள்.

சின்னத்திரையில் இருந்து யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போல வளர்ந்துவிடுவார் என்று மற்றவர்கள் கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்.

உங்கள் மனம் சொல்வதை கேட்டு நடங்கள். அது போதும்” என்று கூறி நன்றி மறவா சிவகார்த்திகேயன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.