dhanush acting with rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 2 . 0 படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் ரஞ்சித் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி தொடங்கவுள்ளதாம்.
மேலும், இப்படம் முழுவதும் மும்பை தாராவி பின்னணியில் நடக்கவுள்ளதாகவும், அதற்காக தாராவி போல் பிரமாண்ட செட் அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷும் ஒரு கெஸ்ட் ரோலில் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் நாயகன் ஸ்டைலில் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தற்போது மற்ற கதாநாயகி, மற்றும் மற்ற நடிகர்கள் தேடுதலில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கும் சந்தோஷநாராயணன் இசையமைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.