dhanush acting rajinikanth role
தனுஷ் மற்றும் அமலாபால் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படம் "வேலையில்லா பட்டதாரி" . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். தாணு தயாரிக்கிறார்.
இந்நினையில் மும்பையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை கஜோல், தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய தனுஷ், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தமிழ் படத்தில் கஜோல் நடிக்க ஓற்றுக்கொண்டது தனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இந்த படத்தில் கஜோல் வில்லையாக நடிக்க வில்லை என்றும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறினார்.
தனுஷிடம் 'காலா' படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என, செய்தியாளர்கள் கேட்டதற்கு. நான் காலாவாக வரும் ரஜினிகாந்தின் சிறு வயது தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் அவருக்காக அவருடைய இடத்தில நான் நடித்தால் அது தன்னுடையா பாக்கியம் அந்த ஆசையும் எனக்கு உண்டு. தற்போது வரை இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தனுஷ் தெரிவித்தார்.
