dhanush acting karikaalan character
இயக்குனர் ரஞ்சித் 'கபாலி' படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா கரிகாலன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தாராவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இளம் வயதில் 'கரிகாலன்' என்கிற பெயரோடு வருவதாகவும், வயதான தோற்றத்தில் 'காலா' என்கிற பெயரோடு அழைக்கப்படுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தை தயாரித்துக்கொண்டிருக்கும் தனுஷ் இப்படத்தில் ரஜினியின் சிறுவயது கதாபாத்திரமான 'கரிகாலனாக' வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்த 'பா.பாண்டி' படத்தில், தனுஷ் ராஜ்கிரண் சிறுவயது தோற்றத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
