திரையுலகில் பல துறைகளிலும் வெற்றி நாயகனாக வளம் வரும் தனுஷுக்கு, இப்படி வித்தியாசமான பிரச்சனை வரும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். 

அப்படித்தான் சிவகங்கையை சார்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்கள் மகன் என நீதி மன்றத்தை நாடி சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதியும் உத்தரவிட்டனர், இதை தொடர்ந்து கஸ்துரிராஜா கூட ‘தனுஷ் என் மகன் தான்’ என கூறினார்.

தற்போது தனுஷ் தன் பேஸ்புக் பக்கத்தில் தான் குழந்தையாக தன் பெற்றோர்களிடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் மறக்க முடியாத பொன்னான புகைப்படம் என்றும், பதிவிட்டுள்ளார்.