Dhansika crying about T.Rajendar speech at Vizhithiru Movie Press Meet

மீரா கதிரவன் இயக்கத்தில் விதார்த், தன்ஷிகா, எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'விழித்திரு'. இப்படத்திற்கு டி.ராஜேந்தர் ஒரு பாடல் ஒன்றை எழுதி, பாடி நடித்துள்ளார். 

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி படம் வெளிவரவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நாயகி தன்ஷிகா மேடையிலிருந்த யாருடைய பெயரையும் சொல்லாமல் படத்தை மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். அவரைத் அடுத்து வந்து பேசிய டி.ராஜேந்தர், "விழித்திரு படத்துக்கு பிறகுதான் கபாலி படத்தில் நடித்தார் தன்ஷிகா. சூப்பர்ஸ்டார் உடன் நடித்ததுமே நான் யாரென்று இப்ப கேட்டுகிட்டு இருக்கு. இது தான் உலகம். மேடையில் பேசும்போது கூட என் பெயரை சொல்லவில்லை. 

அப்போது தன்ஷிகாவை பார்த்து நீயெல்லாம் என் பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன்? ஹன்சிகாவை பற்றியே கவலைப்படாதவன் நான் இந்த தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன்" என்றார்.

இதனையடுத்து அவரிடம் தன்ஷிகா மன்னிப்புக் கேட்டும் ஏற்காத டி.ஆர். தன்ஷிகாவைப் பற்றி தொடர்ந்து விமர்சித்து பேசியதால் அவர் கண்கலங்கினார். " தயவுசெய்து உட்காருங்கள் ஒரு நீங்கள் பெரிய நடிகை. மலையோடு நடித்த பின் இந்த மடுவெல்லாம் தெரியாது. இது தான் உலகத்தோட ஸ்டைல். மேடை நாகரீகத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதை தன்ஷிகாவுக்கு ஒரு அண்ணனா நான் கற்றுத்தருகிறேன். பெரிய படங்களில் நடிக்கும் தன்ஷிகா சிறிய படங்களின் விளம்பரத்திற்கு வருவதற்கு நன்றி. என கூறினார்.

டி.ஆரின் இந்த அதிரடி பேச்சால் நிகழ்சசி முடியும் வரை மேடையிலேயே கண்கலங்கியபடியே அழுதுகொண்டே இருந்தார் தன்ஷிகா.