dhanshika acting prostitute character
நடிகை தன்ஷிகா சினம் என்னும் ஆவண படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மும்பையில் வசிக்கும் பாலியல் தொழிலாளி ஒருவர் பெண் இயக்குனரிடம் வந்து தன் வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் படி கேட்டுக்கொள்ள, அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது வாழ்க்கையை அந்த பெண் இயக்குனர் படமாக எடுப்பதே கதை.
அதன்படி இயக்குனராக பாலிவுட் நடிகை 'பட்டியா பக்' நடிக்க, 'தன்ஷிகா' தான் பாலியல் தொழில் செய்பவராக நடித்துள்ளார்.
மேலும் படத்தில் நடிக்க சம்பளம் கொடுத்தும் அதை வாங்காமல் மறுத்துவிட்டாராம் தன்ஷிகா. சமூக நலனுக்காக எடுக்கப்படும் இப்படத்திற்காக ஒரு ரூபாய் கூட பெறாமல் தியாகம் செய்துள்ளார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
