பிரபல தியேட்டர் மூடப்படுகிறதா?... திரையரங்கு நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!
இந்நிலையில் இரண்டாவது அலையால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான தேவி தியேட்டர் விரைவில் மூடப்பட உள்ளதாக செய்தி வெளியாகினது.
கொரோனா பெருந்தோற்று காரணமாக திரையுலகம் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதனை சார்ந்துள்ள விநியோகம், தியேட்டர்கள் உள்ளிட்டவையும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. கொரோனா முதல் அலைக்கு தப்பித்த திரையரங்குகள் பலவும், தற்போது இரண்டாவது அலையில் சிக்கி தள்ளாடி வருகிறது.
கொரோனா முதல் அலையால் நஷ்டமடைந்து பிரபல தியேட்டர்கள் பலவும் மூடப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது அலையால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான தேவி தியேட்டர் விரைவில் மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் நிர்வாகம் உண்மை நிலவரம் குறித்து அ றிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பிரபல செய்தித்தாளில் வெளியான செய்தி முழுக்க தவறானது என்றும், தங்களுடைய தேவி திரையரங்கம் கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாக அவ்வப்போது புதுப்புது தொழில்நுட்பங்களை உட்புகுத்தி பல திரைப்படங்களை திரையிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் தொடர்ந்து தியேட்டர் வளத்தையும் இதர இடங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி அதை ரசிகர்களும் பொதுமக்களும் காணும் வகையில் ஒளிபரப்பு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சினிமா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
கடந்த கொரானா அலை காலத்தில் கடந்த ஓராண்டு காலம் முதல் இன்று வரை (02.06.2021) கூட, திரையரங்க வளாகத்தினை கிருமி நாசினிகள் உபயோகித்து சுத்தம் செய்து வருவதாகவும், அதற்கான உபகரணங்களை நிர்மானித்து. தொற்று அண்டாத வண்ணம் தொற்று பாதுகாப்பு வளாகமாக நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்களுடைய திரையரங்கம் மற்றும் திரையரங்கு வளாகம் பராமரிப்பு பணிகளை தினந்தோறும் எங்களது சி சி டிவியில்(CCTV) ரசிகர்களும் பொது மக்களும் பார்க்கும் வண்ணம் ஒளிப்பரப்பி வருவதாகவும், இப்படிப்பட்ட செய்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் சம்பந்தபட்ட பத்திரிகையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.