பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, திகில் திரைப்படம் 'தேவி'.  ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, திகில் திரைப்படம் 'தேவி'. ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படம் வெற்றி பெற்றதால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, எடுக்க முடிவு செய்தனர் படக்குழுவினர். அதன்படி 'தேவி 2 ' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, கதாநாயகனாகவும் தமன்னா, கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படப்பிடிப்பு பணிகள் முடிவந்தது, போஸ்ட் ப்ரொடக்ஷான் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நேற்று நடைபெற்ற 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி விழாவில் அறிவித்தர். 

தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை 'தேவி' படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் இந்த பார்ட் 2 படம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.