கடைக்குட்டி சிங்கம் படத்தில் பக்கா விவசாயியாக மாறி, ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த கார்த்தி, இவரின் அடுத்த படமான 'தேவ்' படத்தில் சிட்டி இளைங்கனாக மாறியுள்ளார்.

கார்த்தியின் 'தேவ்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த படத்தின் டிரைலரை, நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த படத்தில் சாகசத்தை விரும்பும் ஒருவராக உள்ளார் கார்த்தி, இது பையா படத்தில் இருந்து சற்று வித்தியாச படுத்தி காட்டி இருந்தாலும், ஒரு நண்பர்கள் கூட்டம், கார்த்திக்காக அவர்கள் பெண் தேடுவது, கார்த்தி தனக்கு பிடித்த பெண்ணை பார்த்தவுடன் காதலை சொல்ல தயங்குவது, சண்டை காட்சி, உள்ளிட்ட விஷயங்கள் இரண்டு படங்களுக்கும் ஒத்து போகிறது எனவே ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான பையா படத்தை இது நினைவு படுத்துகிறது. 

இந்த படத்தின் டிரைலர் இதோ: