ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி, ஹிட் கொடுத்து விட்டு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினியை இயக்கி முடித்த உடன் விஜய்யை இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி, ஹிட் கொடுத்து விட்டு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினியை இயக்கி முடித்த உடன் விஜய்யை இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மீடியம் பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம் தேசிய பெரியசாமி இயக்கிய 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், ரித்து வர்மா ஹீரோயினாகவும் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவி, நிரஞ்சனி, கௌதம் மேனன், உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக விஜய் டிவி ரக்ஷனுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து வாழ்த்தியது அனைவரும் அறிந்ததே... இதுகுறித்த ஆடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகியது. மேலும் தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக தேசிய பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தை தொடர்ந்து தான் நடிகை விஜய் வைத்து படம் இயக்க உள்ளாராம் தேசிங்கு பெரியசாமி. சமீபத்தில் விஜய்யை சந்தித்த தேசிங் பெரியசமி கதை ஒன்றை கூறியதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதால், தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ள படத்தை இயக்கிய முடித்ததும் வாருங்கள் கண்டிப்பாக இணைந்து படம் பண்ணலாம் என கூறியுள்ளாராம். அதேபோல் விஜய்யும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ஒப்பந்தமாகி உள்ள படத்தில் நடித்து முடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.