பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு உள்ளே வந்த இளம் நடிகர் ஷாரிக்ஹாசன் வெளியேற்றப்பட்டார். இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுப்பதன் மூலமும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகிறார்கள் நிகழ்ச்சியாளர்கள். இதனால் அடுத்தடுத்து என்ன என்ன சண்டை, யாருக்குள் வெடிக்கும் என்றும் நினைக்க தோன்றுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டீ-ஷர்ட் கொடுக்கிறார், அதில் யாரின் புகைப்படம் இருக்கிறதோ அவர்களை போல் நடந்துகொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், டேனி யாஷிகாவை போல் எந்த நேரமும் மேக்கப் மீது அதிக ஆர்வம் காட்டுவது போலவும், பொன்னம்பலம் மகத் எப்படி யாஷிகாவை காட்டி பிடித்து, கொஞ்சுவது போல் நடந்து கொள்வாரோ அதே போல் இவர்கள் இருவரும் நடந்து கொள்கிறார்கள். 

இந்த ஒரு டாஸ்க் போட்டியாளர்களை அதிரடியாக மாற்றியுள்ளது என்றும் கூறலாம்.