Deivamagal seriyal actress Engagement

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீரியல் தெய்வ மகள். இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலரும்கூட அடிமையாகிவிட்டார்கள். அதற்குக் காரணமானவர், சின்னத்திரை கதாநாயகியான நடிகை வாணி போஜன்.

பலர் சத்தியா என்ற பெயரில் வரும் வாணிக்காகவும், அண்ணியார் கதாபாத்திரத்தில் வரும் காயத்ரிக்காகவும் விடாமல் இந்தத் தொடரைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் சத்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷப்ணத்துக்கு சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள கிளப் ஹவுஸ் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவருடைய நிச்சயதார்த்த விழாவுக்கு, இந்த சீரியலில் நடித்து வரும் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து கூறினர்.