deivamagal prakash beard

தெய்வமகள்

தெய்வமகள் சீரியல் தொடங்கி 5 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் ஒரு வழியாக இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அண்ணி காயத்ரி சுட்டு கொல்லப்பட்ட மாதிரி சீரியலில் காண்பிக்கப்பட்டது.இன்றோடு சிரியலும் ஒருவழியாக முடிந்து விட்டது.அது சரி நம் விஷயத்துக்கு வருவோம்


ஜவ்வு மிட்டாய்



பொதுவாக சீரியல் என்றாலே ஜவ்வு மிட்டாய் போல இழுப்பார்கள். அதிலும் இந்த சீரியல் பற்றி சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.இதில் உடனே நடந்த விஷயம் என்னவென்றால் பிரகாஷிற்கு தாடி வளர்ந்ததுதான்.பிரகாஷின் தாடியை வைத்து நெட்டிசன்கள் அநியாயத்திற்கு கலாய்த்து தள்ளி விட்டனர்.

ஆர்.ஜே.பாலாஜி

பிரகாஷ் சோகமாக இருக்கும் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலஜியுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார்கள்.

மரியாதை

பிரகாஷின் ஒட்டு தாடியை பார்த்து தாடிக்கான மரியாதையை போச்சுடா உங்களால என்று கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.


நியாயம்

என்னதான் ஒட்டு தாடியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா என்றும் பதிவிட்டு பிரகாஷை ஒரு வழியாக்கிவிட்டனர்.

இனி 8 மணிக்கு தெய்வமகள் சீரியல் வரப்போவதில்லை.அதற்கு பதில் சென்னை28 புகழ் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி தொடர் திங்கள் முதல் ஒளிபரப்பாக்க இருக்கிறது.இந்த தொடரை மக்கள் ஏற்று கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.