சூப்பர் ஸ்டார் நடித்த கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன் தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 

இவர் டெல்லியில் நடைபெற்ற மன அழுத்தம் குறித்த நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார்.

பின் இதில் இவர் பேசுகையில் ‘சில ஆண்டுகளுக்கு முன் தானும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் என்றும் , இதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது.

தனி அறையில் இருக்கும் போது மிகவும் மனம் நொந்து இருப்பேன், தனிமையிலேயே காலத்தை கடந்தேன்’ என கூறும் போது அவர் மேலும் பேச முடியாத அளவிற்கு தீடீர் என தேம்பி அழுதார்.

இதனால் அதில் கலந்து கொண்ட அவரது ரசிகர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடித்தனர்.