"ராச லீலா" என்ற படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இடையே கெமிஸ்ட்ரி பற்றிக் கொண்டது. நிஜத்தில் கெமிஸ்ட்ரி வேலை செய்ததால் திரையிலும் இந்த காதல் ஜோடியின் நடிப்பு சிறப்பான வரவேற்பை பெற்றது. வழக்கம் போல என்னதான் பாலிவுட் வட்டாரங்களில் கிசு, கிசு எழுந்தாலும், 6 ஆண்டுகள் காதலில் சின்சியராக இருந்த ரன்வீர் - தீபிகா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். சென்ற ஆண்டு இத்தாலியிலுள்ள கோமோ ஏரியில் பாலிவுட்டின் க்யூட் ஜோடியான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்கிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் கூட தம்பதி இருவரும் பாலிவுட்டில் பிசியாக வலம் வந்தனர். 

தற்போது கிரிக்கெட் விளையாட்டு வீரரான கபில் தேவ் கேரக்டரில் பிசியாக நடித்து வருகிறார் ரன்வீர் சிங், கபில் தேவ் மனைவி ரோமியாக களம் இறங்க உள்ளது வேற யாருமில்லை, நம்ம தீபிகா தான். என்னதான் கணவன், மனைவி இருவரும் ஷூட்டிங், ஷூட்டிங் என ஒடிக்கொண்டிருந்தாலும் தங்களது முதலாவது திருமண நாளை சிறப்பாக கொண்டாட  முடிவு எடுத்திருந்தனர்.  

இதையும் படிங்க: கணவருடன் செம்ம ஆட்டம் போட்ட தீபிகா படுகோனே... இணையத்தில் வைரலான வீடியோவால் வந்த வினை... இந்த சமயத்தி...சமயத்திலயா இப்படி ஆகனும்...!

முதலாவதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதி சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தீபிகா. 

அத்துடன் "எங்களது முதலாவது திருமண நாளை முன்னிட்டு, வெங்கடாஜலபதியிடம் ஆசி பெற்றோம். உங்களது அளவு கடந்த அன்பு, ஆசி மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் தீபிகாவும், அவருடன் ரன்வீர் சிங் ஜாரிகை வேலைப்பாடுகள் நிறைந்த தங்க நிற குர்தாவும், பிங்க் கலர் துப்பட்டாவும் அணிந்து புதிதாக திருமணம் ஆன ஜோடி போல காட்சியளிக்கின்றனர். பாலிவுட்டின் க்யூட் கம்புல்ஸான தீபிகா - ரன்வீரின் திருப்பதி விசிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.