Deepika Padukone Join With AA22A6 Movie : அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'AA22xA6' படத்திற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே ஹிட் ஆன நிலையில் இப்போது அல்லு அர்ஜூனின் 22ஆவது படமான 'AA22xA6' எற படத்தை இயக்கி வருகிறார். இது அட்லீயின் 6ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் என்று இயக்கிய 5 படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே ஒரு இயக்குநர் என்ற சாதனையையும் அட்லீ படைத்துள்ளார்.
ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ 'AA22xA6' இந்தப் படத்தை இயக்க புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜூனும் அட்லீயுடன் இணைந்துள்ளார். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக, சர்வதேச அளவில் ஆக்ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினர் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறாரா இல்லை என்பது குறித்து அடிக்கடி தகவல் வெளியாகி வந்த நிலையில் இந்தப்படத்தில் தீபிகா படுகோன் நடிப்பது உறுதியாகிவிட்டது.
அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்காக தீபிகா படுகோனே 100 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார். அதோடு இதற்கு முன்னதாக தி இன்டர்ன் என்ற படத்திலிருந்து விலகியிருக்கிறார். மேலும், ரஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணால் தாக்கூர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கான ஆயத்தப் பணிகளை தீபிகா தொடங்கிவிட்டதாகவும், 2025 நவம்பரில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் பிங்க்வில்லா செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அவதார் பாணியில் படம் உருவாகிறது. 2026 செப்டம்பர் வரை படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2027 இன் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுவரை அல்லு அர்ஜுன் வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
