Deepika Padukone is the temple

பத்மாவதி திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என சித்தி விநாயகர் கோயிலில் நடிகை தீபிகா படுகோனே இன்று வழிபாடு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பதினாறாம் நூற்றாண்டு காலத்தில் ராஜஸ்தானை ஆண்ட சித்தூர் ராணி பத்மினியின் ஆட்சி காலத்தை மாதிரியாக வைத்து ‘பத்மாவதி’ என்ற பெயரில் பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி சினிமா படம் தயாரித்துள்ளார். 

இதில் சித்தூர் ராணி பத்மினியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதில் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரிக்கும் வகையில் கதை அமைந்துள்ளதால் ராஜபுத்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் இதற்கு இயக்குநர் பஞ்சாலி மறுப்பு தெரிவித்துள்ளார். பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் திட்டமிட்டபடி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே பத்மாவதி படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஜனவரி 25-ந் தேதி பத்மாவத் படத்தை வெளியிடலாம் என்று அனுமதி வழங்கியது நீதிமன்றம். இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அந்த படம் முக்கிய நகரங்களில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் பத்மாவத் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை தீவைத்து எரிப்போம் என்று கர்னி சேனா அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். 

ஆனாலும் படம் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நடிகை தீபிகா படுகோனே இன்று வழிபாடு செய்தார்.