deepika padukone appartment fire

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோன், மும்பையின் வசித்து வரும் வோர்லி பகுதியில் உள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்பின் 33-வது தளத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 

வோர்லியில் உள்ள பிரபாதேவி என்ற இடத்தில், பியல் மாண்டெல என்ற பல அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

அக்கட்டிடத்தின் 33-வது தளத்தில் பிற்பகல் 2 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

ஸ்கை லிஃப்ட் என்ற உயர் ரக ஹைட்ராலிக் ஏணியும் வரவழைக்கப்பட்டு, குடியிருப்புக்களில் இருந்தோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் குடியிருப்பின் 26-வது தளத்தில் தான் நடிகை தீபிகா படுகோனுக்கு சொந்தமான வீடு உள்ளது. மேலும் பல திரையுலக பிரபலங்களும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.