தனது சொந்தக் கணவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் சம்பளத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் நடிகைகளுக்கு மத்தியில் ‘அவரோட ஜோடியா நடிக்கணும்னா எனக்கு டபுள் சம்பளம் வேணும்’ என்று தயாரிப்பாளரிடம் அடம்பிடித்து சாதித்திருக்கிறார் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே.

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில்  இந்திப் படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ்-ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார்.

தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு துவங்கி  நடந்து வருகிறது. இதில் கபில்தேவின் மனைவி பாத்திரத்துக்கு மிஅக்வும் குறைவான காட்சிகளே இருந்த நிலையில் அப்பாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனேவை தயாரிப்பாளர்கள் அணுகினர். துவக்கத்தில் பயங்கர பில்ட் அப் காட்டிய தீபிகா படுகோனே வழக்கமாக தான் நடிக்கும் காட்சிகளில் பாதி மட்டுமே இப்படத்தில் இருப்பதால் அதற்கு தண்டனையாக டபுள் பேமெண்ட் கொடுத்தால் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்தார். அதாவது எட்டு முதல் 10 கோடி வாங்கும் தீபிகா இப்படத்துக்கு 15 கோடி கேட்க தயாரிப்பாளரும் சம்மதித்துவிட்டாராம்.