இந்த வருட தீபாவளிக்கு, கொடி மற்றும் காஷ்மோரா ஆகிய படங்கள் வருவதால், தீபாவளிக்கு வெளியிட போவதாக தெரிவித்த கத்தி சண்டை , சைத்தான் , கடவுள் இருக்கா குமாரு ஆகிய படங்கள் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்க பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெண் இயக்குனர் துளசி தாஸ் , மலையாளம் மற்றும் தமிழில் எடுத்துள்ள 'திரைக்கு வராத கதை' படம் ரிலீஸ் ஆகா உள்ளதாக தெரிவித்துள்ளனர் படக்குழு.

இந்த படத்தில் நதியா, கோவை சரளா, இனியா போன்ற பல நடிகைகள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஆண்கள்லே இல்லாமல், பெண்களை வைத்து மட்டுமே இயக்கியுள்ள புதுமையான படம்.

இந்த படத்தில் நதியா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், தில்லார் படமாக எடுக்க பட்டுள்ள இந்த படம் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.