நடிகை மஞ்சு வாரியரும், திலீப்பும் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்தனர்.
இவர்களுக்கு மீனாட்சி என்கிற 16 வயது மகள் உள்ளார்.

நடிகை காவ்யா மாதவனுடன் திலீப்க்கு ஏற்பட்ட காதலால், இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது .

இதனால் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகார பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர் . திலீப், மஞ்சு வாரியர் மகள் மீனாட்சி தந்தையுடன் தன் தந்தையுடன் இருக்க விருப்பம் தெரிவித்ததால் அவர் தந்தையுடனே இருக்கிறார்.
மஞ்சுவாரியர் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் , மேலும் பல பெண்களுக்கு முக்கியத்துவம் வாழ்ந்த படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 21 படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த 48 வயதான மலையாள முன்னனி நடிகர் திலீப்பும் 32 வயதான காவ்யா மாதவனும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். 
அதுவும் 16 வயதான தனது மகள் மீனாட்சி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார், இது மேலும் மலையாள ரசிகர்களை அதிருப்தியாக்கி உள்ளது.
ஏற்கனவே காவ்யா மாதவன் திருமணமாகி ஒரே மாதத்தில் தனது திருமண உறவை முறித்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த திருமணத்தால் பல திலீப் ரசிகர்களும் கூட மஞ்சு வாரியருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் 16 வயது மகள் முன் திருமணம் செய்து கொண்டதற்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
