'மிருதன்', 'டிக் டிக் டிக்', போன்று வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து 'டெடி' என்கிற படத்தை இயக்க உள்ளார். 

இந்த படம் குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

'டெடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கரடி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக, அவரின் காதல் மனைவி சாயிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 'கஜினிகாந்த்', படத்தை தொடர்ந்து மீண்டும் ஆர்யாவுக்கு  ஜோடியாக சாயிஷா நடிப்பார் என கூறப்படுகிறது.  

மேலும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்  என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .