Debut actress Nayana competition for Amala Paul
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட், கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் திருட்டுப் பயலே... படத்தின் இரண்டாவது பாகமாக இயக்கியுள்ள திரைப்படம் திருட்டுபயலே 2.
இந்தப் படத்தில் கதாநாயகர்களாக பாபி சிம்ஹா மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். கதாநாயகியாக நடிகை அமலபால் படு கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பரடே - Copy.jpg)
நயனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்தப் படத்தில் அமலா பாலுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
