பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் சமூகத் தளங்கள் பற்றிய கதை 'வேறென்ன வேண்டும்'. புதுமுகங்கள் நரேன் ராம்தேஜ் கதாநாயகனாகவும், ப்ரெர்னா கன்னா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். 

தர்ஷன் ஷரித் வில்லனாக நடித்துள்ளார். கடந்த தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தையும் நவீன தொழில்நுட்பங்களுக்கு யாரும் அடிமையாகி விடக்கூடாது என்ற கருத்தையும் வைத்து இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தில் கதாநாயகன் - கதாநாயகி உதட்டோடு உதடு சேர்ந்து முத்தங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு கட்சி இடம் பெறுகிறது. இருவரும் முது முகம் என்பதால் தயங்கி தயங்கி இந்த காட்சியில் நடித்ததால் 50 முறை பாடமானதாக இயக்குனர் சிவபாரதி குமரன் கூறியிருக்கிறார். இந்த படத்தை அனுமணி, சல்லா திம்ம ரெட்டி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர், மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் படமாகி வருவது குறிப்பிடத்தக்கது.