Asianet News TamilAsianet News Tamil

விஜய் தேவரகொண்டாவின் ’டியர் காம்ரேட்’படத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு...

நேற்று, ஒரே நாளில், தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மண்டோன்னாவின் ‘டியர் காம்ரேட்’படத்துக்கு கர்நாடக மாநிலம் முழுதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வலைதளங்கள் முழுவதிலும் ‘தெலுங்கு மொழியைத் திணிக்கும் ‘டியர் காம்ரேட் படத்தைப் புறக்கணிப்போம்’ என்ற கோஷங்கள் வைரலாகி வருகின்றன.

dear comrade in trouble at karnadaka
Author
Karnataka, First Published Jul 27, 2019, 4:01 PM IST

நேற்று, ஒரே நாளில், தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மண்டோன்னாவின் ‘டியர் காம்ரேட்’படத்துக்கு கர்நாடக மாநிலம் முழுதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வலைதளங்கள் முழுவதிலும் ‘தெலுங்கு மொழியைத் திணிக்கும் ‘டியர் காம்ரேட் படத்தைப் புறக்கணிப்போம்’ என்ற கோஷங்கள் வைரலாகி வருகின்றன.dear comrade in trouble at karnadaka

பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்துள்ள தெலுங்குப் படம் ‘டியர் காம்ரேட்’. இந்த ஜோடி இதற்கு முன்னர் நடித்த ‘கீத கோவிந்தம்’படம் சூப்பர் ஹிட்டாகியிருந்ததால் துவக்கத்திலிருந்தே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ்,மலையாள்ம்,கன்னட மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டு நேற்று ஒரே நாளில் ரிலீஸானது. இதுவரை வந்த வசூல் நிலவரங்களின்படி அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.dear comrade in trouble at karnadaka

இந்நிலையில் கன்னடத்தில் இப்படம் டப் செய்யப்பட்டிருந்தாலும் அங்கு கன்னட டப்பிங்கைவிட ஒரிஜினல் தெலுங்கு பேசும் டியர் காம்ரேட் படமே அதிக செண்டர்களில் ரிலீஸாகியிருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக மைசூரில் வெளியிடப்பட்ட அத்தனை தியேட்டர்களிலுமே தெலுங்கு காம்ரேட்தான் ஓடிக்கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான கர்நாடக மக்கள் ‘இது ஒரு வகையில் தெலுங்கு மொழித் திணிப்புதான். இதை இனியும் அனுமதிக்காமலிருக்க ‘தெலுங்கு பேசும் டியர் காம்ரேட் படத்தை முற்றிலுமாக புறக்கணிப்போம்’ என்ற கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இந்த 4 மொழி மக்களும், குறிப்பாக தெலுங்கர்கள், தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடும் ராஷ்மிகா கன்னடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios