dd talking about twiter issue
இப்போது பிரபலங்களின் பெயரில் புது,ட்விட்டர் கணக்குகள் உருவாக்க பட்டு அவர்களது பெயரை டேமேஜ் செய்யும் அளவிற்கு ஒரு சில கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதே போல் சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு உருவாக்க பட்டு ஒரு சில தகவல்கள் அவர் கூறியது போல உலாவர தொடங்கியுள்ளது.
இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,டிடி கூறியுள்ளது... என்னுடைய பெயரில் யாரோ போலி கணக்கு தயார் செய்துள்ளனர் , தயவு செய்து அதனை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
தற்போது டிடி தனுஷ் இயக்கிவரும் 'பவர் பாண்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டிடி என்பது குறிப்பிடத்தக்கது .
