dd talking about agriculture people

சின்னத்திரை தொகுப்பாளர் என்று சொன்னால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது டிடி தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர், மேலும் தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்.

தற்போது தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் 3 வேளை சாப்பிடுறோம் ஆனா... சோறு போடும் இவர்களுக்கு ஒன்னும் பண்ண முடியலையே என்பது போல் வேதனையோடு கூறியுள்ளார் , மேலும் முதலமைச்சரும், பிரதமரும் தமிழக விவசாயிகளை காக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.