டிடி

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிக பிரபலமானவர் டிடி.இவர் ஏதாவது நிகழ்ச்சியில் தோன்றினாலே போதும் அந்த இடமே கலகலப்பாகி விடும்.சமீபத்தில் காதலர் தினத்தன்று இவருடைய உலவிரவு என்ற காதல் ஆல்பம் சாங் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முதலமைச்சர்

இந்நிலையில் அவர் முதலமைச்சரை பாராட்டி பேசியுள்ளார்.டிடி முதலமைச்சரை புகழ்ந்து என்னவோ உண்மைதான்.ஆனால் அவர் புகழ்ந்தது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை.ஆம் எதற்கு தெரியுமா?

சாதியற்றவர்

கேரளாவில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு சாதியற்றவர் என்ற தனி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுத்து அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் பினராயி விஜயன் .இதை பலரும் வரவேற்க டிடியும் தமது டிவிட்டர் பக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.