பிரபல தொகுப்பாளினி டிடி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு உள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறு வயது முதலே, நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் அளவில் இடம் பிடித்தவர் டிடி.டிடி என்றாலே, அந்த நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கும் என நினைக்கும் அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை அதிகம்.இவருடைய திருமணம் கூட, தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைக்கு நடைபெற்றது போல ஒளிப்பரப்பினர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,இவருடைய திருமண வாழ்க்கையில்  நீண்ட ஆண்டு  தொடர முடியவில்லை... கருத்து வேறுபாடு காரணமாக, டிடி தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் .இந்நிலையில் சிறிது காலம் இடைவெளி விட்டு இருந்த டிடி மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்திய காலத்தில் பல்வேறு  நிகழ்சிகளில் வெற்றி நடை போட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு முன்பை விட, திருமணத்திற்கு பின்பு ஒய்யாரமாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் டிடி.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபோன் எக்ஸ் மொபைலில் எடுக்கப்பட்ட போட்டோவை, போர்ட்ரெய்ட் மோடில் எடுத்து பதிவிட்டு உள்ளார்.

பேக்ரவுண்டு நிறம் கருமையாக காண்பித்து மிக அழகான போட்டோவை பதிவிட்டு உள்ளார். இந்த போட்டோவை  பார்த்த அவருடைய ரசிகர்கள் அவரை ஆஹா ஓஹா என அவரை  புகழ்ந்து பாடி உள்ளனர்.