Sundar C new movie : சுந்தர் சி நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள்வைத்து இயக்கி வரும் புதிய படத்தில் விஜய் டிவி புகழ் திவ்ய தர்ஷினி இணைந்துள்ளார்.

சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நடிகர் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி தற்போது அடுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். ராசி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜீவா ஜெய் சுந்தர் சி கூட்டணியில் ஏற்கனவே கலகலப்பு-2 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது இந்த நிலையில் மீண்டும் இதே கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான கபூர் & சன்ஸ் படத்தின் ரீமேக் என யூகங்கள் முதலில் வெளிவந்தன, ஆனால் அவ்னி சினிமாக்ஸ் மூலம் படத்தை தயாரிக்கும் குஷ்பூ சுந்தர் சமூக ஊடகங்களில் அவற்றை மறுத்தார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்தில் விஜய் டிவி புகழ் திவ்ய தர்ஷினி இணைந்துள்ளார். இது குறித்து டிடி ட்வீட் செய்துள்ளார்..இந்த பதிவை மறு பதிவு செய்துள்ள குஷ்பூ..நானும் சீக்கிரம் இணைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்..

Scroll to load tweet…