day affter tomorrow Narasruran Teaser is release

துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள "நரகாசூரன்" படத்தின் டீசர் நாளை மறுநாள் (அதாவது நவம்பர் 25) வெளியாகும்.

வித்தியாசமான கதையமைப்பு மற்றும் திரைக்கதை அமைப்பிற்காக அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘துருவங்கள் பதினாறு’.

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து, இவர் இப்போது இயக்கி வரும் படம் ‘நரகாசூரன்’.

இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் நவம்பர் 25-ல் வெளியிடப்படும் என இயக்குநர் கார்த்திக் நரேன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.