புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் (Ashes Test series) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர் (David Warner). கொரோனா லாக்டவுன் சமயத்தில் பிரபல இந்தி பாடல்களுக்கு மகள்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து நடனமாடி இவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் தாறுமாறு வைரலானது. 

பிரபல ஹீரோக்களின் முகத்திற்கு பதிலாக ஃபேஸ் ஆப் (Face App) மூலமாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போடுகின்றன. இதுவரை கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு முன்னணி நடிகர்களின் வீடியோக்களை ஃபேஸ் ஆப் மூலம் மாற்றி பதிவிட்டு அவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய வார்னர் 94 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில், தற்போது புஷ்பா (pushpa) பட பாடல் வீடியோவில் அல்லு அர்ஜுனுக்கு (allu arjun) பதிலாக தன்னுடைய முகத்தை பேஸ் ஆப் மூலம் வைத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ஷாக்கான ரியாக்‌ஷனுடன் அல்லு அர்ஜுன் செய்ய, இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியோ (virat kohli), கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார். 

View post on Instagram