daughter of famous actress got mocked by fans for her dressing

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் ”தடக்” எனும் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் திரைப்படம் இனிமேல் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது ஆனால் ஜான்வி கபூர் கூறித்த சர்ச்சைகள் மட்டும், இப்போதே தொடர்ந்து ரிலீசாகி வருகிறது.

சமீபத்தில் கூட தடக் பட ஹீரோவுடன் ஜான்வி நெருங்கி பழகிவருவதாக கிசுகிசு வெளியாகி இருந்தது. ஜான்வி கபூர் அவரது உடைகள் அணியும் விதத்தால், பல முறை சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் செய்திருக்கும் காரியம் பிரபல ஆங்கில இணையதளத்தில் விமர்சிக்கப்படும் அளவிற்கு இருந்திருக்கிறது.

ஜான்வி சமீபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது அணிந்திருந்த உடை, முகம்சுழிக்கும் படியாக இருந்தது. இந்த உடைக்காகவே இப்போது இணையத்தில் பிரபலமாகி இருக்கிறது ஜான்வியின் புகைப்படம். இந்த உடையை பார்த்து கேலி செய்த ஒருவர், ஜான்வி அணிந்திருக்கும் உடை அழகாகதான் இருக்கிறது. ஆனால் அவசரத்தில் பேண்ட் போட தான் அவர் மறந்துவிட்டார் என கூறி கேலி செய்து இருக்கிறார்.

Janhvi Kapoor wears a cute dress but fans think she forgot something importanthttps://t.co/nOqBPUhvMHpic.twitter.com/2KFefvrgMG

— HT Entertainment (@htshowbiz) June 5, 2018

இது பிரபல ஆங்கில இணையதளம் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. இதனை அறிந்த ஜான்வியின் சகோதரர், அந்த ஊடகாத்தை திட்டி தீர்த்திருக்கிறார். இது போன்று கேலி செய்வதை அவர் கண்டிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் நெட்டிசன்கள் ஒருபக்கம் ஜான்வியை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.