Darling Nicky Kalanani praise of this activity is ...
புற்றுநோய் பாதித்த குழந்தைகளோடு நடிகை நிக்கி கல்ராணி ரோஸ் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கப் போட்டியாக வலம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி.
ஜி,வி.பிரகாஷுடன் டார்லிங் படத்தில் அறிமுகமான இவர் தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மரகத நாணயம் படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது.
இவரது நடிப்பில் இந்தாண்டில் மட்டும் மூன்று படங்கள் வெளியான நிலையில், நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது கொசுறு தகவல்.
இந்த நிலையில், சென்னையின் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அப்பல்லோ கேன்சர் மருத்துவமனைக்குச் சென்ற நிக்கி கல்ராணி அங்கு புற்றுநோயால் பாதித்த குழந்தைகளோடு ரோஸ் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார்.
என்னதான் வருடா வருடம் புதிது புதிதாக கதாநாயகிகள் அறிமுகமானாலும், இந்த மாதிரியான நல்ல குணம் கதாநாயகிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர்.
