’குண்டு ஒண்ணு வச்சிருக்கோம்’...’தர்பார்’தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு...
பொங்கலை ஒட்டி ஜனவரி 9ம் தேதியே ரிலீஸாகவிருக்கும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ’தர்பார்’பட இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. பட ரிலீஸுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக ரஜினியின் 70 வது பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருப்பதால் அதை தனது பட விளம்பரத்துக்கு திசை திருப்பிவிடத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.
’தோட்டா நம்பர் ஒன்று லோட் செய்யப்பட்டுள்ளது. விசையைத் தட்டத் தயாராக இருக்கிறோம். தலைவரின் ரசிகர்களே நாளைய ஒரு முக்கிய அறிவிப்புக்காகக் காத்திருங்கள்’என்று தர்பார் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பொங்கலை ஒட்டி ஜனவரி 9ம் தேதியே ரிலீஸாகவிருக்கும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ’தர்பார்’பட இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. பட ரிலீஸுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக ரஜினியின் 70 வது பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருப்பதால் அதை தனது பட விளம்பரத்துக்கு திசை திருப்பிவிடத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கமல் தலைமையில் டிசம்பர் 7ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் நாளை முதல் படம் தொடர்பான புதுப்புது அப்டேட்களை வெளியிட முடிவு செய்துள்ள லைகா நிறுவனம் அதன் முதல் தொடக்கமாகவே இப்படி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுருப்பதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அரசியலில் இணந்து செயல்படுவோம் என்று ரஜினியும் கமலும் அறிவித்துள்ள நிலையில் அந்த இருவரையும் வைத்து படங்கள் தயாரித்துவரும் லைகாவுக்கு அந்த அறிவிப்பு ஒரு விளம்பர ஜாக்பாட் என்றே சொல்லப்படுகிறது.