சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் 'தர்பார்'. தலைவரின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில், நேற்றைய தினமே 'தர்பார்' படத்தின் பிரீமியர் ஷோ போடப்பட்டது. மேலும், தமிழக ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை காலை முதல் கண்டு களித்து வருகின்றனர்.

200 கோடி செலவில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் மொத்தம் 4000 ஆயிரம் திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் மொத்தம் 7000 ஆயிரம் திரையரங்குகளிலும் வெளியாகிறது.

மேலும் அரபு நாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் 7000 திரையுயரங்குகளில் வெளியானது இல்லை. 'தர்பார்' மட்டுமே முதல் முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதனால்... தலைவர் ஆரம்பத்திலேயே அடித்து தூக்கி விட்டார் என காலரை உயர்த்தி கெத்து காட்டி வருகிறார்கள் தலைவரின் ரசிகர்கள்.